300.               ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் – அது என்ன?
301.               ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
302.               ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
303.               ஓயாது இரையும் இயந்திரம் அல்ல.உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
304.               ஓயாது இரையும் எந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்துமல்ல, அது என்ன?
305.               ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
306.               ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
307.               ஓலை வீட்டில் குடியிருப்பாள்; உண்ணாமல் தவமிருப்பாள். வாடகையும் தரமாட்டாள்; வீட்டைக் காலியும் செய்ய மாட்டாள். அவள் யார்?
308.               கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
309.               கட கடா குடு குடு; நடுவிலே பள்ளம். – அது என்ன?
310.               கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடிவது என்ன?
311.               கடை மூன்றில் தண்நிழலும், கடையிரண்டால் போதை வரும், முதலிரண்டு ஓய்விற்க்காகும், முதலோடு கடை சேரின் வெடிக்கும், முதலோடு கடையிரண்டு சுமையாம், மொத்தமாய் என்னவென்று சொல்லுங்க?
312.               கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில். நான் யார்?
313.               கடையிரண்டால் குழந்தை வெறுப்பு, சிலதை திங்கலாம், முதலிரண்டு ஓசை மாறிய திருவிழா, மொத்தமாய் புரியாமல் இருக்கும் நான்யார்?
314.               கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
315.               கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
316.               கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. – அது என்ன?
317.               கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
318.               கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
319.               கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
320.               கண்ணும் காதும் ஒன்றாவான்; கழுத்தும் தலையும் ஒன்றாவான். அவன் யார்?
321.               கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப்பூக்கும்; தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும். அது என்ன?
322.               கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
323.               கருப்பு சட்டை காரன் காவலுக்கு கெட்டிகாரன் அது என்ன?
324.               கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?
325.               கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
326.               கழுத்துண்டு; கையில்லை. நாக்குண்டு; பேச்சில்லை. வாயுண்டு; அசைவில்லை. தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை. – அது என்ன?
327.               கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை – அது என்ன?
328.               கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
329.               கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும். – அது என்ன?
330.               காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவாள்; முக்காடு போட்டால் சொக்காயில் தொங்குவாள். – அவள் யார்?
331.               காகிதம் கண்டால் கண்ணீர் விடும்,முக்காடு போட்டால் மூலையில் அமரும் அது என்ன?
332.               காட்டுக்குப் போனேன்; இரண்டு விறகு கொண்டு வந்தேன்; பகலிலே ஒன்று, இரவிலே ஒன்று எரித்தேன். – அது என்ன?
333.               காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்; காக்காய்ம் தின்னவில்லை; குருவியும் தின்னவில்லை – அது என்ன?
334.               காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால், காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான். – அவன் யார்?
335.               காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
336.               காலும் இல்லை; கையும் இல்லை; காடும் மலையும் நெடுகச் செல்வான். அவன் யார்?
337.               காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
338.               கால் இல்லை; ஓட்டம் உண்டு, மூச்சு இல்லை; காற்று உண்டு. அது என்ன?
339.               கால் உண்டு; நடக்க மாட்டான். முதுகு உண்டு; வளைக்க மாட்டான். கை உண்டு; மடக்க மாட்டான். – அவன் யார்?
340.               காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?
341.               காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
342.               காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
343.               கிண்ணம் போல் – பூ பூக்கும் கிள்ளி முடிக்க முடியாது… – அது என்ன பூ?
344.               குடிக்காத தண்ணீர் குடத்துக்குள்ளே கிடக்குது. அது என்ன?
345.               குட்டி போடும்; ஆனால் எட்டப் பறக்கும் – அது என்ன?
346.               குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புடவை. அது என்ன ?
347.               குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
348.               குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
349.               குண்டோதரன் வயிற்றிலே, குள்ளன் நுழைகிறான். – அவன் யார்?
350.               குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான் அவன் யார்?
351.               கெணத்த சுத்தி அகத்தி கீரை அது என்ன?
352.               கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். – அவன் யார்?
353.               கொதிக்கும் கிணற்றில் குதிப்பானாம்; கூச்சல் இல்லாமல் குளிப்பானாம். அவன் யார்?
354.               கொத்தரோ,தச்சரோ,கட்டாத கோபுரம் சின்னதாய் இருக்கும் சித்திரக்கோபுரம் அது என்ன?
355.               கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன். பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன். பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன். விதையில்லாக் கணியை வேண்டி வைத்தேன் – அவர்கள் யார்?
356.               சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
357.               சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
358.               சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?
359.               சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
360.               சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
361.               சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
362.               சுருக்கென்று குத்தும் முள்; பொறுக்க முடியாது – அது என்ன?
363.               சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்; விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். – அவன் யார்?
364.               சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
365.               செக்கச் சிவந்திருப்பாள்; செவ்வாழை போல் இருப்பாள்; வாலும் முளைத்திருப்பாள்; வந்திருப்பாள் சந்தையிலே. அவள் யார்?
366.               செடியில் விளையாத பஞ்சு; தறியில் நூற்காத நூல்; கையில் தொடாத துணி! – அது என்ன?
367.               செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான். அவன் யார்?
368.               டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
369.               தட்டச் சீறும் அது என்ன?
370.               தட்டு நிறைய லட்டு; தாய் திண்ண முடியலே. அது என்ன?
371.               தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
372.               தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
373.               தண்ணீர் கடல் மேலே தாம்பாளத் தட்டு மிதக்குது. அது என்ன?
374.               தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
375.               தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
376.               தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
377.               தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுவது அது என்ன?
378.               தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
379.               தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
380.               தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
381.               தன் மேனி முழுதும் கண்ணுடையாள்; தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள். அவள் யார்?
382.               தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
383.               தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். – அது என்ன?
384.               தான் இருந்தால் பிறரை இருக்கவிட மாட்டான். அவன் யார்?
385.               தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் தொட்டால் போது; ஒட்டிக் கொள்வான். – அவன் யார்?
386.               தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
387.               தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
388.               தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
389.               தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
390.               தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
391.               நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?
392.               நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
393.               நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
394.               நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்?
395.               நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
396.               நாங்கள் ஒரு சாதி – இவுங்க யாரு?
397.               நாலு உலக்கை குத்திவர, இரண்டு முறம் புடைத்து வர, துடுப்புத் துளாவி வர, துரை மக்கள் ஏறிவர. – அது என்ன?
398.               நாலு மூலை நாடகசாலை; நடுவிலிருக்கும் பாடகசாலை; ஆடும் பெண்கள் பதினாறு; ஆட்டி வைப்பவர் இரண்டுபேர். – அது என்ன?
399.               நாலு மூலைச் சதுரப் பெட்டி – அதன் மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி! அது என்ன?

விடுகதைகள் – விடைகள்

…or something like this:

300.               கண்ணீர்
301.               கண்ணீர்
302.               ரத்தம்
303.               கடல் அலை
304.               கடல் அலை
305.               கடல்
306.               பற்கள்
307.               ஓலைச் சுவடியில் செய்யுள்
308.               கரும்பு
309.               ஆட்டுக்கல்
310.               உப்பு
311.               பாய்மரம்
312.               பட்டுத்துணி
313.               விளங்காய்
314.               பழனி
315.               வெங்காயம்
316.               மின்னல், இடி, மழை
317.               நிழல்
318.               மெழுகுத்திரிவத்தி
319.               காற்று
320.               பாம்பு
321.               வேப்பமரம்
322.               சோளப்பொத்தி
323.               பூட்டு
324.               சுண்ணாம்பு
325.               பாம்பு
326.               மை விட்டு எழுதும் பேனா
327.               யானை
328.               பூசனிக்கொடி
329.               கரும்பலகையும் சாக்பிஸ்ஸும்
330.               பேனா
331.               பேனா
332.               சூரியன் சந்திரன்
333.               உப்பு
334.               தேனீ
335.               தென்னைமரம்
336.               பாதை
337.               நிழல் அல்லது விம்பம்
338.               பந்து
339.               நாற்காலி
340.               புல்லாங்குழல்.
341.               சாமரம்
342.               பலூன்
343.               ஊமத்தம் பூ
344.               தேங்காய்
345.               வெளவால்
346.               வெங்காயம்
347.               கத்தரிக்காய்
348.               ஆட்டுக்கல்
349.               பூட்டும் சாவியும்
350.               தொலைபேசி
351.               கண்
352.               படகு, கப்பல்
353.               அகப்பை அல்லது கரண்டி
354.               கறையான் புற்று
355.               வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம்
356.               கொசு / நுளம்பு
357.               வாழைப்பழம்
358.               அருவி
359.               காய்ந்த சிவப்பு மிளகாய்
360.               கண்
361.               தீக்குச்சி
362.               தேள்
363.               குடை
364.               பூமி
365.               மிளகாய்
366.               ஒட்டடை
367.               கண்ணாடி
368.               கொசு
369.               தீக்குச்சி
370.               முட்டை மேல் அடைகாக்கும் கோழி
371.               உப்பு
372.               உப்பு
373.               நிலா
374.               தபால் தலை
375.               நுங்கு
376.               அன்னாசிப்பழம்
377.               பென்சில்
378.               பென்சில்
379.               பென்சில்
380.               உப்பு
381.               மீன் வலை
382.               நெல்
383.               நெருப்பு
384.               ஓட்டை
385.               சிலந்தி வலை
386.               தண்ணீர்,
387.               தொலைபேசி
388.               எலுமிச்சம்பழம் தேசிக்காய்
389.               முதுகு
390.               பனம்பழம்
391.               மணிக்கூடு
392.               பென்சில்
393.               பட்டு
394.               குடை
395.               நாய்
396.               சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம்
397.               யானை
398.               தாயம் விளையாட்டு
399.               அம்மியும் அரைக்கும் கல்லும்/குழவியும்

VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000