400.               நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
401.               நான் பார்த்தால் அவன் பார்ப்பான்; நான் சிரித்தால் அவன் சிரிப்பான். அவன் யார்?
402.               நான்கு கால்கள் உள்ளவன்; இரண்டு கைகள் உள்ளவன். உட்கார்ந்து கொண்டிருப்பான்; உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்?
403.               நீரில் நனைத்தாலும் நீளம், அகலம் குறையாது. அது என்ன?
404.               நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது. – அது என்ன?
405.               நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
406.               நூல் இல்லை; ஊசி உண்டு; வாயில்லை; பாட்டுப்பாடும் – அது என்ன?
407.               நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
408.               நூல் நூற்கும்; இராட்டை அல்ல, வலை பின்னும்; தறியும் அல்ல – அது எது?
409.               நூறு கிளிக்கு ஒரே வாய். அது என்ன?
410.               நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு. – அது யாரு?
411.               நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன். நெருப்பைத் திண்பான்; நீரும் குடிப்பான் – அவன் யார்?
412.               பகலில் துயிலுவான்; இரவில் அலறுவான்……… அவன் யார்?
413.               பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை. – அது என்ன?
414.               பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
415.               பச்சை பாம்பு கல்லைத் தூக்குது! – இது என்ன?
416.               பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்; எடுத்துப் பார்க்கலாம் – ஆனால் தொடுத்துப் போட முடியாது – அது என்ன?
417.               பஞ்சு மெத்தை மஞ்சம் போட்டு வச்சிருக்கு; படுத்துத் தூங்கத்தான் ஆளில்லாமல் இருக்கு. அது என்ன?
418.               படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
419.               படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். அது என்ன?
420.               பட்டணத்தில் இருந்து இரண்டு சிறாய் கொண்டு வந்தேன்; ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது. அது என்ன?
421.               பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
422.               பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
423.               பரட்டைத்தலை மாமியாருக்குப் பவளம் போல் மருமகள்! – அவள் யார்?
424.               பழுத்திருக்கும் பழமாம்; யாரும் பறிக்காத பழமாம். அது என்ன?
425.               பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக் கையிலே ஒரு டை; தலையிலே ஒரு டை. – அது என்ன?
426.               பறிக்கப் பறிக்க பெரிதாகும்! – அது என்ன?
427.               பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
428.               பாத்தி சிறு பாத்தி; பாய்வது கரு நீர்; வேரோ வெள்ளை வேர்; பூவோ செம்பூ – அது என்ன?
429.               பார்க்க முடியும் நூல்,தைக்க முடியா நூல், அது என்ன நூல்?
430.               பார்த்ததோ இரண்டு பேர், எடுத்ததோ பத்துப் பேர், ருசி பார்த்ததோ ஒருத்தன். – அவன் யார்?
431.               பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் – அது யார்?
432.               பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
433.               பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
434.               பிறக்கும் போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். – அவள் யார்?
435.               பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?
436.               பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
437.               பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
438.               பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
439.               பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
440.               பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்… – அது என்ன?
441.               பொன்னு விளையும் பூமி. அது என்ன?
442.               மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்கு பூசை ஆகுது! – அது என்ன?
443.               மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். – அது என்ன?
444.               மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல. பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்லன். – அவன் யார்?
445.               மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
446.               மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
447.               மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
448.               மழை காலத்தில் குடை பிடிப்பான், அவன் யார்?
449.               மழையில் பூக்கும் பூ
450.               மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
451.               மாவிலே பழுத்த பழம்; மக்கள் விரும்பும் பழம். அது என்ன?
452.               மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
453.               முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
454.               முதலிரண்டில் காட்சி, முதல் மூன்றால் பெயர் விளித்தல் கடை இரண்டில் தலையெழுத்து மாறிய சோதிடம் மொத்தத்தில் பிரதிபலிக்கும்
455.               முதலிழந்தால் ஓடும், முதலிரண்டு இன்றி தீம்புகை, இரண்டோடு கடை சேரின் போதையாம், நான்கில் நளினம் காட்டும் இது என்ன?
456.               முதலின்றி அழகி, நடுவின்றி அரை, கடையின்றி வெறுஞ்சொல், கவிதை சொன்ன இவர் யார்?
457.               முதலின்றி போதை, நடுவின்றி வெடிக்கும், கடையின்றி வெறுஞ்சொல், மொத்தமான இந்தச்சுமை என்ன?
458.               முதலும் கடையும் சேர்ந்தால் விநாயக விருப்பம், முதலோடு கடையிரண்டு சேர்ந்தால் ஓசை மாறிய பெருங்காற்று, முதலோடு மூன்று சேர அறுசுவைக்குள் ஒன்று, இரண்டு வார்த்தையாக்கினால், முதல் வார்த்தையில் முக்கியமானவர், இரண்டாம் வார்த்தை பாம்பெதிரி, மொத்தத்தில் அழகுப் பறவை, நான் யார்?
459.               முதலெழுத்தில் கவிதை முதலிரண்டால் உலகம் மொத்தத்தின் இடை மெலிந்தாலும் முதலும் கடைசியும் சேர்ந்தாலும் தையல், கண்ணிலும் உண்டு
460.               முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை
461.               முதலோடு கடை சேரினும், அன்றில் கடையிரண்டும், குன்றின் அடுத்த வடிவம், முதல் நான்கின் கடையில் புள்ளியிழந்த நிலவகை, நடுவோடு கடை சேர கழுத்துக்கு மேல் போகும், மொத்தத்தில் முருகனிடம் சரணடைவோம்!
462.               முதலோடு கடை சேர்ந்தால் மேல் பகுதி. முதலோடு மூன்றை சேர்த்தால் செல்வம். இச்செல்வம் கொண்டு கடை மூன்றை ஓட்டவும் செய்யலாம்.
463.               முதலோடு நான்கும் மூன்றும் சேரின் நாவில் எச்சில் ஊறும் பிஞ்சு காய். மொத்தத்தில் இது இல்லாத கிராமம் இல்லை. அது என்ன?
464.               முதலோடுகடை சேர்ந்தால் “தா”, கடை இரண்டால் ஏற்றம், நடுவிலே பலவும் திணிக்கலாம், மொத்தத்தில் கோழிக்கு பிடித்த இடம், அது என்ன?
465.               முதல் இரண்டு பொது இடங்களில் தடை. இரண்டு யாவர்க்கும் இரண்டு. இரண்டு நீங்கின் சற்றே ஓசை மாறிய மொருமொரு தின்பண்டம். சிறுவர்களுக்கு மிக பிடிக்கும். மொத்தத்தில் நினைவுகளாய் இருக்கும் இது என்ன?
466.               முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
467.               முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
468.               முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது; படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை. அது என்ன?
469.               முத்து முத்துத் தோரணம்; தரையில் விழுந்து ஓடுது – அது என்ன?
470.               முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
471.               முயல் புகாத காடு எது?
472.               முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
473.               முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?
474.               மூட்டை தூக்கி முத்தையன் நத்தையல்ல; தண்ணீரில் இருக்கும் தத்தையன் தவளையல்ல. – அவன் யார்?
475.               மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
476.               மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! – அது யாரு?
477.               மொத்தத்தில் இரண்டு வார்த்தை, மொத்தமாய் அழகணி முதலெழுத்தோடு கடை சேர வல்லின மார்கழிக்குளுமை முதலும் நான்கைந்தும் இருகைகளில்
478.               யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
479.               வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
480.               வட்டக் குளத்திலே மீன் வந்து மேயுது; ஈட்டியாலே குத்தி எடுத்து வாயில் போடு! – அது என்ன?
481.               வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
482.               வளைக்க முடியும்; ஒடிக்க முடியாது – அது என்ன?
483.               வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
484.               வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
485.               வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
486.               வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன?
487.               வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
488.               வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன?
489.               வாலும் தலையும் ஒன்று உடல் ரங்கூனில் உண்டு ஸ்ரீ ரங்கத்திலும் உண்டு ஆனால் தில்லையில் இல்லை குத்தூசியில் தலை உண்டு மத்தியில் இல்லை மொத்தத்தில் மாதம் தவிர்த்தக் கவிதை இது என்ன?
490.               வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
491.               வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி அது என்ன ?
492.               விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்; வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான். அவன் யார்?
493.               விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?
494.               விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது! – அது என்ன?
495.               வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
496.               வீட்டிலே இருக்கிற அண்டாவுக்கு காதும் இல்லை: மூடியும் இல்லை. அது என்ன ?
497.               வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?
498.               வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
499.               வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
500.               வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை அவன் யார்?
501.               வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
502.               வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
503.               வெள்ளத்தில் போகாது; வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது; கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
504.               வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
505.               வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.
506.               வெள்ளிக் கிணத்துல தண்ணி
507.               வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு
508.               வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?
509.               வெள்ளை மாடு; வாலால் குடிக்குது – அது என்ன?
510.               வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
511.               வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
512.               வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
513.               வெள்ளை வயலிலே கறுப்புவிதை. கண்ணால் பார்த்தேன்; கையால் எடுக்க முடியவில்லை! – அது என்ன?
514.               வெள்ளைக் கத்திரிக்காய், கள்ளக் கூச்சல் போடுது அது என்ன ?
515.               வெள்ளைக் கொல்லை; கறுப்பு விதை. கை விதைக்கும்; வாய் கொறிக்கும். – அது என்ன?

விடுகதைகள் – விடைகள்

400.               நத்தை
401.               முகம் பார்க்கும் கண்ணாடி
402.               நாற்காலி
403.               துணி
404.               நீல வானின் மேகம்
405.               தையல் ஊசியும் நூலும்
406.               கிராமபோன்
407.               சிலந்திவலை
408.               சிலந்தி
409.               வாழைப்பூ
410.               செங்கல்
411.               இரயில்
412.               ஆந்தை
413.               முதுகு
414.               கிளி
415.               புடலங்காய்
416.               வெண்டைக்காய்
417.               மேகம்
418.               பட்டாசு
419.               கனவு
420.               கற்பூரம்,சாம்பிராணி
421.               மிளகாய்
422.               வத்தல் மிளகாய்
423.               அத்திப்பழம்
424.               நிலா
425.               குடை, சடை
426.               குழி
427.               சீப்பு
428.               விளக்கு
429.               சிலந்தி வலை
430.               கண்கள், கைவிரல்கள். நாக்கு
431.               யானை
432.               கண்கள்
433.               தலைமுடி
434.               வாழையிலை
435.               தவளை
436.               தவளை
437.               தேங்காய்
438.               வானொலிப் பெட்டி
439.               முருங்கைமரம்
440.               நட்சத்திரங்கள் / வானம்
441.               தங்கச்சுரங்கம்
442.               வாழைப்பழம்
443.               இரயில்
444.               அணில்
445.               அன்னாசிப்பழம்
446.               விழுது
447.               அணில்
448.               காளான்
449.               குடை
450.               சிலந்தி வலை
451.               அப்பளம்
452.               சிலந்தி,
453.               தேங்காய்,
454.               கண்ணாடி
455.               பரதம்
456.               பாரதி
457.               பாரம்
458.               புள்ளிமயில்
459.               பார்வை
460.               ஆபத்து
461.               மருதமலை
462.               மாட்டு வண்டி
463.               மாட்டு வண்டி
464.               குப்பைமேடு
465.               புகைப்படம்
466.               கண்மணி
467.               நத்தை
468.               நட்சத்திரங்கள்
469.               மழை
470.               நாக்கு
471.               முக்காடு
472.               பலாப்பழம்
473.               மின்சாரம்
474.               ஆமை
475.               பஞ்சு
476.               பட்டாணி
477.               பணி(பனி)
478.               கண் இமை
479.               பாம்பு
480.               வடை
481.               வழுக்கை / பொக்கை
482.               தலைமுடி
483.               நெருப்பு
484.               ஆறு அல்லது அருவி
485.               சிரிப்பு
486.               வீணை
487.               தபாற் பெட்டி,
488.               விளக்கு
489.               குரங்கு
490.               அகப்பை
491.               மழை
492.               விளக்குமாறு
493.               உலக்கை
494.               நிலா
495.               பூட்டும் சாவியும்
496.               கிணறு
497.               நாட்காட்டி
498.               செருப்பு
499.               கத்தரிக்கோல்
500.               போட்டோ
501.               நிழல்
502.               கல்வி
503.               கல்வி
504.               மழை மேகம்,
505.               கண்
506.               தேங்காய்
507.               முட்டை
508.               தீக்குச்சி
509.               விளக்குத்திரி
510.               முட்டை
511.               முட்டை
512.               உழுந்து
513.               புத்தகம்
514.               சங்கு
515.               கரும்பலகை